Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். 92 வயது உடைய அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்துள்ளார். மேலும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

பின்னர் தொடர்ச்சியாக கட்சி பணிகளில் ஈடுபட்டு, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றோருடன் நட்புக் கொண்டிருந்தார். இதையடுத்து ஜி.கே மூப்பனார், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சியை ஆரம்பித்தபோது, அதில் இணைந்து கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று அவர் காலமானார். அவரது உடல் இன்று மாலை நொளம்பூர் மயானத்தில் வைத்து அடக்கம் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |