ஜெர்மன் அரசு, நாட்டில் கொரோனோ பரவல் தீவிரமாகி வருவதால், ராணுவத்தை களமிறக்க தீர்மானித்திருக்கிறது.
ஜெர்மனியில் கொரோனாத் தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து, ஒரே நாளில் அதிக கொரோனா பரவியது கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா பரவலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் கூட்டமைப்பினுடைய தலைவராக இருக்கும் Marburger Bund என்பவர் கூறுகையில், வரும் நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும். எனவே, நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றக்கூடிய நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காகவும், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்காகவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கும், அரசு 12,000 ராணுவ வீரர்களை களமிறக்கவுள்ளது.
தற்போது வரை, இதற்காக 630 வீரர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில், வீட்டிலிருந்தபடி பணி செய்வது உட்பட பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.