Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை அதிபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை..!

இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Image

இலங்கை அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வர அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கையில் அமைந்துள்ள புதிய தலைமையின் கீழ் இந்தியா-இலங்கை உறவு மேம்படும் எனத் தான் நம்புவதாக ட்வீட் செய்திருந்தார். மேலும் மற்றொரு ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபருக்கு விடுத்திருந்த அழைப்பை ஏற்று நவம்பர் 29-ஆம் தேதி கோத்தபய ராஜபக்ச இந்தியா வரவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |