திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், தற்போது பாரதிராஜா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.