Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேரடி முறையில் தேர்வா…? மாணவர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் முழுமையாக திறக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கல்லூரிகளில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெரிவித்து ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டமானது அனைத்து மாணவர்கள் முன்னேற்றம் அமைப்பின் சார்பாக நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் மாணவர்கள் “ஆன்லைன் முறையில் எங்களுக்கு பாடம் நடத்திவிட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கோஷங்களை” அவர்கள்  எழுப்பினர். ஆகவே ஆன்லைன் மூலமாக தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இதில் நேரடி தேர்வினால் பல மாணவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |