உணவகங்கள் மற்றும் விடுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கின்றனர்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38, 420 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையானது 1,211 ஆக பதிவானது என்று ரஷ்யா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் 80 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் விகிதமானது 40%த்திற்கு மேலாக உயரவில்லை. இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் டிஜிட்டல் முறையிலான அதாவது QR Code பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடிக்கின்றனர்.