மகரம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும்.
கற்பனைத்திறன் அதிகரிக்கும். அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியிடம் இன்று அன்பைச் செலுத்துவீர்கள்.
உறவினர்கள் மூலம் உதவிப் பெறுவீர்கள். ஆடம்பரச்செலவை செய்யத் தோன்றும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். கொஞ்சம் சிரமம் காட்டினால் எந்தவொரு சூழலையும் சமாளிக்கலாம். தெய்வீகஅருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இன்று நீங்கள் நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். கம்பீர தோற்றம் வசீகரமான பேச்சாற்றல் வெளிப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.