Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருடா..!.. இவன்…. இரண்டு கை….. இரண்டு விக்கெட்…. தெ.ஆப்பிரிக்க பவுலர் சாகசம் …!!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மான்சூ டி20 தொடரில் கேப்டவுன் அணியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கிரகோரி மகலோக்வானா வலது, இடது என இரண்டு கைகளிலும் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் மான்சூ சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கேப்டவுன் பிளிட்ஸ் – டர்பன் ஹூட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில், கேப்டவுன் அணியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கிரகோரி மகலோக்வானா (Gregory Mahlokwana) இரண்டு கைகளிலும் மாறி மாறி பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

டர்பன் ஹீட் அணி 175 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது எட்டாவது ஓவரை கிரகோரி வலது கையில் வீச, அவரது பந்துவீச்சில் டர்பன் வீரர் சரில் எர்வீ கவர் திசையில் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, 10ஆவது ஓவரை மீண்டும் வீச வந்த கிரகோரி, வலது கையிலிருந்து இடதுகையில் அந்த ஓவரை வீசினார். அவர் வீசிய 10ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில், டர்பன் ஹீட் அணியின் கேப்டன் டேன் விலாஸ் போல்ட்டாகி நடையைக் கட்டினார்.

https://twitter.com/MSL_T20/status/1196016782777241605

இறுதியில், கேப்டவுன் பிளட்ஸ் அணி இப்போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் ஹீட் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இரண்டு கைகளிலும் பவுலிங் செய்த கிரகோரி மகலோக்வானா மூன்று ஓவர்களில் 26 ரன்கள் வழங்கி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், இரண்டு கைகளிலும் பந்தை வீசி இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்த கிரகோரியின் பவுலிங் வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

https://twitter.com/MSL_T20/status/1196014571162669056

Categories

Tech |