திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐந்து பேர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் ஐந்து லட்சம் சன்மானம் தருவதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய இராமலிங்கம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகின்றது. இந்நிலையில் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐந்து பேர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என் ஐ ஏ தெரிவித்துள்ளது. அப்படி தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் [email protected] மற்றும் 99623 61122-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.