பிரதமருக்கும் ராணுவ ஜெனரலுக்கும் Inter-Services Intelligence தலைவரை தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக மோதல் நிலவுகிறது.
பாகிஸ்தானின் Inter-Services Intelligence தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவ ஜெனரலான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் ராணுவ புரட்சி சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ராணுவம் இம்ரான்கானை மாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்து வருகிறது.
குறிப்பாக வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் Inter-Services Intelligenceன் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால் பிரதமரோ ISI தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீதை ஆதாரிக்கிறார். மேலும் 2 வாய்ப்புகளை ராணுவம் பிரதமருக்கு வழங்கியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது . முதலில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதிக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையெனில் எதிர் கட்சிகள் தீர்மானத்தை கொண்டு வரும். இந்த இரண்டுமே பிரதமர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கும். தற்பொழுது பாகிஸ்தானை ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கூட்டணிகளான முட்டாஹிதா குவாமி இயக்கம் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தங்களது ஆதரவை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த பர்வேஸ் கட்டாக் அல்லது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் இவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலைமையும் மோசமாக உள்ளதால் பிரதமரின் அரசியல் செல்வாக்கும் குறைந்துள்ளது.