தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இருந்தாலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக பாடல், ஆடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்று கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.