தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் நேரடியாகவே தேர்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படாது என்றும் நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராடி வந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.