புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும்,மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.