பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ரெட்டியார்பட்டி பகுதியில் வசிக்கும் கணேசன், பழனியப்ப பெருமாள், சுரேஷ் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.