பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நிச்சயமாக இருக்கிறது என ஷைன் டாம் சாக்கோ கூறியிருக்கிறார்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், இந்த படத்தில் இயக்குனரின் தனித்துவமான நகைச்சுவை எதிர்பார்க்கலாம் என கூறியிருக்கிறார். மேலும், ”இந்த படத்தில் காமெடி நிச்சயம் இருக்கிறது” எனவும் தெரிவித்திருக்கிறார்.