மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மது காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் 77 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மது அருந்துவதன் மூலம் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு சுரக்கும் நச்சு மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மதுவை உட்கொண்டால் மக்கள் இறந்து விடுவார்கள். ஆனால் இது தெரிந்தும் மக்கள் ஏன் மது அருந்ததுகிறார்கள்? என்று புரியவில்லை. மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.