Categories
உலக செய்திகள்

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்க..! கதறிய சிறுவன்… கேமராவில் சிக்கிய பரபரப்பு காட்சி..!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த 7 வயது சிறுவன் “நீங்கள் எனது தந்தையே கிடையாது, என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்று கதறியதை அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் கூர்மையாக கவனித்துள்ளார். இதையடுத்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி காவல்துறையினருக்கு அந்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் தகவல் அளித்துள்ளார். மேலும் கிழக்கு ஐரோப்பிய சாயலில் சிறுவனை கடத்திய அந்த மர்ம நபர் இருந்ததாகவும், அவர் குப்பை சேகரிப்பு பைகள் இரண்டை வைத்திருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முதல்கட்டமாக சிறுவனை கடத்தி சென்ற அந்த நபர் 30 வயதை கடந்தவர், கடுகு மஞ்சள் நிறத்தில் பஃபர் கோட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடத்தி செல்லப்பட்ட சிறுவனும், அந்த மர்ம நபரும் இறுதியாக ஏஞ்சல் மெடோ பகுதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Categories

Tech |