Categories
தேசிய செய்திகள்

புதிய கட்சி பெயர்…. பதிவு செய்த அமரீந்தர் சிங்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், அந்த மாநிலத்து காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அமரீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து அவருடைய கட்சி பெயரை பதிவு செய்யக்கோரி தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ ஷரத்தின் படி பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய கோரி தேர்தல் கமிஷனருக்கு விண்ணப்பம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |