அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸிற்கு உச்சநீதிமன்ற பதவியை அளித்துவிட்டு துணை அதிபர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிபர் ஜோ பைடனுக்கு, எல்லைப் பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. மேலும், கமலா ஹாரிஸை விட போக்குவரத்து அமைச்சராக இருக்கும் பீட் பட்டிகெக்கிற்கு, அதிபர் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடைபெற்ற போது கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரச்சாரம் நாட்டு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது, ஜோபைடன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. வரும் 2024 ஆம் வருட அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிபருக்கும், துணை அதிபருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.