காணை நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்வையிட்டு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள முதலக்கம்பட்டி, அம்சாபுரம், காமக்காபட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளுக்கு காணை நோய் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு குழு உதவி இயக்குனர் கணபதி ராமன் தலைமையில், மருத்துவ குழுவினர் அப்பகுதிகளுக்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்தந்த பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வெளிவந்தவுடன் உரிய சிகிச்சை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.