Categories
உலக செய்திகள்

“ஜப்பான் நாட்டில் பீதியை கிளப்பும், தற்கொலை காடு!”.. காட்டுக்குள் சென்றால் உயிரோடு திரும்ப முடியாது.. மக்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்..!!

ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு வனப்பகுதிக்குள் செல்லும் மக்கள் யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜப்பான் நாட்டில் அகிகஹாரா என்ற தற்கொலை காடு இருக்கிறது. இக்காட்டிற்குள் சென்ற மக்கள் ஒருவரும் திரும்பியதில்லை என்று கூறப்படுகிறது. இந்த காட்டை சுற்றி வாழும் மக்கள் கூறுகையில், இந்த காட்டிற்குள் செல்லும் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள், அதனால், இது “தற்கொலை காடு” என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

மக்கள் நூற்றுக்கணக்கில் அந்த காட்டில் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்கள் இங்கு அமானுஷ்யம் இருப்பதாக நம்புகிறார்கள். அவை தான் அங்கு செல்லும் நபர்களை தற்கொலை செய்ய தூண்டுவதாகவும், அந்த காட்டில் வழி தவறி செல்பவர்கள் எவரும் அங்கிருந்து வெளியே வர முடியாது என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2003 ஆம் வருடத்தில் இந்த வனப்பகுதியிலிருந்து, 105-க்கும் அதிகமான சடலங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த காட்டுப்பகுதி குறித்து மக்கள் கூறும் தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது.

Categories

Tech |