அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி இடமாற்றம் செய்யக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்றும் கொலீஜியம் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் சர்மா மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியும்,கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகளை நியமித்தும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.