தொழிலதிபரின் மனைவி, மகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் தொழிலதிபரான அகமது மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்-பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பஷிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீடு பூட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் அகமது மைதீன் வீட்டில் இருந்த மனைவி பஷிதா பேகம் மற்றும் கடைசி மகன் இஷால் ஆகிய 2 பேரையும் காணவில்லை. இதனால் அகமது மைதீன் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அகமது மைதீன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பஷிதா பேகம் மற்றும் அவரது மகன் இஷால் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.