தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரத்திற்கு இரு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படும்.திங்கள்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இதுவரையில் தடுப்பூசிபோட்டுக் கொள்ளாதவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.