Categories
தேசிய செய்திகள்

சொந்த பந்தம் கண்டுக்கல…. ஆதரவாக இருந்த ரிக்சா ஓட்டுநர்…. மூதாட்டி கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புத்த சமால். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த 25 வருடங்களாக கணவனை இழந்து வாழ்ந்து வரும் மினாட்டி என்ற மூதாட்டிக்கு ரிக்ஷா ஓட்டி வருவதோடு மட்டுமல்லாமல், அந்த மூதாட்டிக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மூதாட்டியின் ஒரே ஆதரவான மகளும் இறந்துள்ளார்.

இதனையடுத்து இந்த மூதாட்டி, தன்னுடைய கஷ்டத்தில் உதவாத உறவினர்கள் தற்போது யாரும் இல்லாததால் சொத்துக்காக மட்டும் கழுகுகள் போல் வட்டமிடுவதை உணர்ந்தார். இந்தநிலையில் பிரதிபலன் பாராமல் தனக்கு உதவ வந்த புத்த சமாலுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வீடு மற்றும் நகை, சொத்துக்களை மினாட்டி உயில் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |