மதுபோதையில் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரித உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் அவரின் நண்பரான மதன் என்பவருடன் மது குடித்துவிட்டு போதையில் சித்தேரி பகுதியில் இருக்கும் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஸ்ரீதர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதன் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் விரைந்து வந்த கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஸ்ரீதரை தேடிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.