கார் மோதிய விபத்தில் கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்தார் வந்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக மகேந்திரன் வக்கணாங்குண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மகேந்திரனின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.