மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் வெள்ளக்கோவில் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பொன்னுசாமி மீது மோதியது. இதில் பொன்னுசாமி பலத்த காயமடைந்தார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பொன்னுச்சாமியை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.