Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம் நியாயமில்ல…. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை….!!

இந்திய ரயில்வே வாரியம் முன்பதிவு செய்தவர்கள் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படாது என்று அறிவித்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்து சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களில் சலுகை வழங்க முடியாது என்று காரணம் கூறினர்.இதையடுத்து கொரோனா காலகட்டத்தில் முந்தைய கால அட்டவணைப்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் இப்போது வழக்கமான ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்பதிவு செய்தவர்கள் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படாது என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் கட்டணம் என்பது பயண தேதிக்கான கட்டணத்தை குறிக்கும். கொரோனா காலகட்டத்தில் ரயில் கட்டண பலமுறை உயர்த்தப்பட்டது.எனவே கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்யும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு அவர்கள் முன்பதிவின் போது செலுத்த கட்டணத்திற்கும் இடையிலான வித்தியாசம் தொகை வசூலிக்கப்படும்.

இது நியாயமில்லை என்றும் பயணம் கட்டணம் குறைக்கப்படும் போது முன்பதிவின் போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்குக் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருவது தான் நியாயம். ரயில்வே துறை அறிவிப்பு வெளி வருவதற்கு முன் முன்பதிவு செய்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களைத் தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

Categories

Tech |