பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருக்கிறார்.
அபுதாபியில் தற்போது டி-10 லீக் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி புல்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை சன்னி லியோன் உள்ளார். இவர் அபுதாபியில் தற்போது நேரத்தை செலவழித்து வருகிறார்.அப்போது அவர் அங்குள்ள கால்பந்தாட்ட மைதனத்தில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், கால்பந்து விளையாடும் சன்னியிடம் உங்கள் இன்ஸ்டாகிராம் பெயர் என்ன என கேட்க, அவர் சன்னி லியோன் என தெரிவித்தார். மேலும் இந்தியரா என கேள்வி கேட்கவே, அவர் கால் பந்தாட்டம் விளையாடும் ஆர்வத்திலே இருந்தார். தற்போது இந்த வீடியோவை சன்னி ரசிகர்கள் அதிகளவில் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.
What's my name..what's my name? 🎶#SunnyLeone
@DelhiBullsT10 @T10League pic.twitter.com/NBDEBQoBXj— Sunny Leone (@SunnyLeone) November 20, 2019