கார்த்திகையை முன்னிட்டு திருப்பூரில் அகல் விளக்குகளை தொழிலாளர்கள் மும்முரமாக விற்பனை செய்து வருகின்றனர்.
வருகின்ற 19-ஆம் தேதி கார்த்திகை கொண்டாடப்பட இருக்கிறது. அன்று வீடுகள் முழுவதும் விளக்குகள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். இதற்காக பல வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையோரம் தொழிலாளர்கள் விளக்குகளை செய்து விற்பனை செய்கின்றனர். இதனை அங்கு வரும் பெண்கள் பலர் ஆர்வத்துடன் அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அகல் விளக்குகள் ரூ.10 முதல் விற்பனை செய்யப்படுகிறது.