வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது ஐபோன் யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்டில் புதிய வாடிக்கையாளர்களை எளிதில் பெறும் வகையில் விளம்பரங்களை உருவாக்க முடியும். இந்த விளம்பரங்களை பேஸ்புக் மூலம் புது வாடிக்கையாளர்களை சென்றடையும். பயனர்களின் பிரைவசி பாதுகாக்க my contacts except என்ற ஆப்ஷன், புதுவித எமோஜிகள், ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குரூப் பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாட்ஸ்அப் கம்யூனிட்டி அறிமுகமாக உள்ளது.