Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு குறைக்க…. உத்திரபிரச முதல்வர் அதிரடி நடவடிக்கை….!!

இந்திய தலைநகரமான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் மற்றும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிலைமை தங்கள் மாநிலங்களுக்கும் வரக்கூடாது என்று டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவசர கால ஆலோசனை கூட்டம் அதிகாரிகளுடன் நடத்தினார். அதன் பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும். அதனை தொடர்ந்து மக்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டு பொது போக்குவரத்தில் செல்வதை அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

அதனைப் போலவே விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு செய்யும் வயல் எரிப்பு வழக்கத்தை கைவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காற்று மாசு விவகாரத்தில் டெல்லி பஞ்சாப் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |