நவம்பர் 19-ஆம் தேதி அன்று சுமார் 600 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பகுதி நேரம் மட்டுமே பார்க்க இயலும் வகையில் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி அன்று சுமார் 600 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த பகுதி சந்திர கிரகணம் இந்திய நேரத்தின் படி காலை 11:31:09-க்கு தொடங்கி மாலை 5:33:40-க்கு வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 600 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக ஏற்படும் நீண்ட சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது.
அதாவது இது போல நீண்ட சந்திர கிரகணம் 15-வது நூற்றாண்டில் அதாவது 1440-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நிகழ்ந்திருப்பதாக வானியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த 468 ஆண்டுகளுக்கு பிறகே இந்த நீண்ட நேர சந்திர கிரகணம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதாவது 2489-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி அன்று இதுபோல அடுத்த நீண்ட சந்திர கிரகணம் ஏற்படும். மேலும் இந்த பகுதி நேர சந்திர கிரகணத்தை இந்தியாவில் அசாம் மற்றும் அண்டை பகுதிகள், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க இயலும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.