மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி விட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.