தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
37 அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், போட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. பல்வேறு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய 37 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்..
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனே பணியில் சேர்வதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.. பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோயில், தேனி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..