Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய குற்றவாளி…. துரத்தி பிடித்த இன்ஸ்பெக்டர்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்பெக்டர் குற்றவாளியை துரத்தி பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்-நீலம்பூர் பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் அவர்களை துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்து விட்டார். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ஹரிஹரசுதன் என்பதும், தப்பி ஓடியவர் சங்கர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் குற்றவாளியை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |