மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வளையம்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் குரும்பபட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது பழையகோட்டை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.