Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்கிட்ட என்ன கேள்வி கேட்கனுமோ.. அதை மட்டும் கேளுங்கள்’ – நடிகர் விவேக்..!!

நடிகர் விவேக் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் குறித்து, தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று தனது 58-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்போது தனது பிறந்த நாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை நட்டார். பின் மாணவ மாணவியரிடம் உரையாடிய பின், விவேக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Image result for Vivek actor

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் தமிழ்நாட்டில் வெற்றிடம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். அதற்கு விவேக், ‘இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே வெற்றிடம் இருக்கிறது?’ என்று தனது பாணியில் நகைச்சுவையாக பதில் கூறினார். பின் தயவு செய்து ‘என்னிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ…. அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள்’ என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |