தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு. அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
Categories