தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இலவச வீட்டு மனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மேலும் பல பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.