நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை கல்வி நிறுவனங்களை திறக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.