ஆம்னி வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தா மங்கலம் கீழத்தெருவில் விவசாயி பெரியசாமி வசித்து வந்தார். இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின் பெரியசாமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பெரியசாமியின் மகன் கேசவமூர்த்தி கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.