சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறும். இதனையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்பம், அரவணை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.