டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலு நேரில் சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக உடனடியாக 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஒட்டுமொத்தமாக 2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்..
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்த பின் பேட்டியளித்த டி.ஆர் பாலு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழுவை அனுப்புவதாக அமித்ஷா கூறினார்.. மத்திய குழு இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தமிழகம் வர உள்ளது.. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 54 பேர் உயிரிழந்த நிலையில், 52 பேர் காயமடைந்தனர். மழை வெள்ளத்தால் 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளன.. மழையால் 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்..