Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது!”.. கடும் விதிமுறையை நடைமுறைப்படுத்த ஜெர்மனி திட்டம்..!!

ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை.

அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, புதிதாக SDP அரசை அமைத்து, தடுப்பூசி செலுத்தாதவர்கள், பணிக்கு செல்வது மற்றும் பொது போக்குவரத்தை உபயோகிப்பது போன்றவற்றிற்கு தடை விதிக்கவுள்ளதாக  தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |