விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு,
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித பலனுமின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தலைக்கவசம் அணிந்து இருந்த போதும் அதனை கழுத்துடன் இணைக்க பயன்படுத்தப்படும் பாதுகாப்பு பட்டையை அவர் அணியாதது தான் தலையில் காயம் ஏற்பட காரணம் என்று மேற்கொண்ட விசாரணையில் கூறப்படுகிறது.