Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் குடியிருப்பின் வாசலில் கிடந்த சிறுமியின் சடலம்!”.. கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவில் 16 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த 1-ஆம் தேதி அன்று Regina என்னும் நகரிலிருந்து நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் வாசலில் 16 வயது சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

அச்சிறுமியின் பெயர் Kadee Burns என்று தெரியவந்திருக்கிறது. தற்போது, காவல்துறையினர் இது தொடர்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், Kadee Burns என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளி,  சிறுவன் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |