பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி விலகியதால் அவருக்கு பதில் வினுஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் நீதிமன்ற காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை விவாகரத்து செய்ய பாரதி உறுதியாக இருக்கிறார். ஆனால் கண்ணம்மா சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார்.
என்னமா பேசிக்கிட்டு இருக்கும்போது குத்திட்ட! 😱
பாரதி கண்ணம்மா – இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/1XEiWuVTBS
— Vijay Television (@vijaytelevision) November 17, 2021
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாரதி நீதிமன்றத்தில் அனைவரின் முன்பும் கண்ணம்மாவின் நடத்தையைப் பற்றி தவறாக கூறுகிறார். இதனால் கோபமடைந்த கண்ணம்மா போலீஸின் கத்தியை எடுத்து பாரதியை குத்தி விடுகிறார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் இந்த கத்தி குத்து சௌந்தர்யாவின் கனவு என கூறப்படுகிறது. தற்போது இந்த பரபரப்பான புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.