Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லா கடன்” ரூ10,00,000 மோசடி செய்த கில்லாடி பெண்…. போலீசார் தீவிர விசாரணை….!!

மதுரையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வட்டியில்லா பணம் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை  tpm  நகரில் உள்ள பாண்டியன்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செல்வி என்பவர், அரசியல்வாதிகள் சிலரின் பினாமி என்று தனது அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர்களின் கருப்பு பணம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெள்ளையாக மாற்றவே வட்டியில்லாமல் கடன் கொடுப்பதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து  ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஐந்து லட்சம் ரூபாய் கடனுக்கு 25 ஆயிரம் ரூபாய் என முன் பணம் வாங்கியவர், செல்வி என்ற நபரிடம் 50 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவவதாக கூறி பத்து லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் குறித்த தேதியை கடந்தும் கடன் தொகையை தராமல் இழுத்தடித்ததால்  பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்த பெண்ணிடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட , வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |